மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு பஞ்சாயத்து ஆனையப்பபுரம் கிராமத்தில் சாலை, வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.