சாலை வசதி இல்லை

Update: 2023-09-20 17:41 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் அருகே கொடிக்களம் ஊராட்சி கண்மணி நகரில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்