திண்டிவனம் அருகே தென்பசாரில் இருந்து அவ்வையார்குப்பம் செல்லும் சாலை சேதமடைந்ததால், அதை பெயர்த்து விட்டு, புதிதாக சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டிருந்ததால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சாலை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தொிவித்தனர்.