சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.எஸ்.நகர் 60 அடி ரோடு கார்னர் முதல் கருப்பாராயன் கோவில் வழி பாறைக்குழி (ஜீவா நகர்) வரை சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்துவதற்கு ஆபத்தான நிலையில்உள்ளது. மண் மேடுகளை குவித்து ஒரு மாதமாகிவிட்டது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது.அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கிறது.நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்கிறார்கள். இதனால் அதிக விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையை உடனே தார்ச்சாலையை போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சீனிவாசன்,திருப்பூர்.
9842247432