கலவை பஜார் வீதியில் சுப்பிரமணியசாமி கோவில் அருகில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டு பல மாதங்களாகிறது. அந்த வழியாக செல்லும் சிறுவர்-சிறுமிகள், வாகன ஓட்டிகள் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் கட்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க கேட்டுக் கொள்கிறேன்.
-சதீஷ், கலவை.