சாலையில் தேங்கும் மழைநீரால் சிரமம்

Update: 2022-11-13 13:40 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆயிரமங்கலம் ஊராட்சி சீயாம்படி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரால் அந்த வழியாக நடந்து செல்வோருக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது. தேங்கிய மழைநீரால் சாலையில் பாசி படிந்து வழுக்கி விழும் அவலம் நடந்து வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலையில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.சுப்பிரமணி, சமூகஆர்வலர், சீயாம்படி. 

மேலும் செய்திகள்

சாலை பழுது