சுடுகாடு சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2024-01-07 17:25 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே கரிக்கல் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையின் முழுவதும் சீராக தார் சாலை அமைக்கப்படவில்லை. அனந்தலை கிராம எல்லை முடிவில் இருந்து சில மீட்டர் தூரம் வரை சாலை பழுதடைந்துள்ளது. இந்தச் சாலை வழியாக பல ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரிக்கல் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜயகுமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்