வேலூர் பேஸ்-1 வள்ளலார் பகுதியில் உள்ள மாருதி நகரில் கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக இரவில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பள்ளி சிறுவர், சிறுமிகள், முதியோர் தடுமாறி பள்ளத்தில் விழும் ஆபத்து உள்ளது. பல ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ள சிமெண்டு சிலாப்பை மாற்றி விட்டு புதிதாக சிமெண்டு சிலாப் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சுரஷே், வேலூர்.