தண்டராம்பட்டு தாலுகா பேராயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கால்வாய் கட்டும் பணி முடிந்து பல நாட்கள் ஆகிறது. கிராமத்தில் முறையாக சாலை அமைத்துத்தர வில்லை. கிராம மக்கள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். எங்கள் கிராமத்துக்கு விரைவில் சிமெண்டு சாலை அமைத்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பேராயம்பட்டு