நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-26 15:02 GMT

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

திருப்பூர் தாராபுரம் மெயின் ரோட்டில் பலவஞ்சிப்பாளையம் பிரிவு சந்திப்பு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த வழித்தடத்தின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் நின்று விரும்பிய இடங்களுக்கு சென்று வருகிறார்கள். ஆனால் இந்த நிழற்குடையின் மேற்கூரை துருப்பிடித்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் இந்த நிழற்குடையின் வெளியே நின்று பஸ், ஷேர் ஆட்டோக்களில் செல்கிறார்கள். மேலும் வெயில் மற்றும் மழைக்காலத்தில் மிகவும் சிரமப்படும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மூர்த்தி, திருப்பூர் 88255 23599

மேலும் செய்திகள்