வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருந்ததி காலனி, செக்கலிமேடு பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு செல்ல புத்துக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏற்கனவே தார் சாலை போடப்பட்டு இருந்தது. இந்தச் சாலை கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை பயன்படுத்தும் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அந்தக் கிராமங்களை சுற்றிலும் மாந்தோப்பு, தென்னந்தோப்புகள் உள்ளன. மாங்காய், தேங்காய் ஆகியவற்றை அறுவடை செய்து வாகனங்களில் சந்தைக்குக் கொண்டு செல்ல போதிய சாலைவசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா?
ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு