நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஜெயந்திபுரம், தேங்காய்காரன் வட்டம், மயிலார்ம்பட்டி, சாம்பல், கொள்ளைஆத்துமேடு, பச்சூர் வரை செல்லும் தார் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமாகி பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சேதமான தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிசாமி, நாட்டறம்பள்ளி.