குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-21 10:10 GMT

வேலூரை அடுத்த சாய்நாதபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ள வள்ளலார் நகர் 2-வது மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இச்சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து வெளியேறும் நீர் சாலையில் வழிந்தோடி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-காசிசுதர்சன், வேலூர்.


மேலும் செய்திகள்