கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள சர்வீஸ் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.