தரைப்பாலம் பழுது

Update: 2022-08-25 10:39 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி சண்டியூரில் இருந்து பெருமாள் கோவில் வழியாக கத்தாரி செல்லும் சாலையில் கொட்டாற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. தரைப்பாலத்தில் ஏனைய பகுதிகள் உறுதியற்ற நிலையில் உள்ளது. இதை உணராத நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து அப்பாதையில் பயணிக்கின்றனர். விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க வேண்டும் அல்லது உறுதியற்ற தரைப்பாலத்தை இடித்து விட்டு சற்று உயரத்துடன் கூடிய புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.

முத்தமிழ்வேந்தன். நாட்டறம்பள்ளி 

மேலும் செய்திகள்