திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா விண்ணவனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்துக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை காட்டுப்பகுதியில் உள்ளது. அதில் மின் விளக்குகள் இல்லை, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதேபோல் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
-அ.குபேரன், விண்ணவனூர்.