வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-03-01 17:09 GMT

திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு அண்ணாசிலையை அடுத்த ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அருகில் வேகத்தடை இல்லாததால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. வேகத்தடை இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அருகே சாலையின் குறுக்கே அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-தங்கராஜ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்