வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடுரோட்டில் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தில் மண்போட்டு சமன்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் நடந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.