வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட களிமண் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இ.சரவணன், தொரப்பாடி.