வேலூர் அண்ணாசாலையில் இருந்து சங்கரன்பாளையத்துக்கு ரிஜிஸ்டர் பெரியசாமி முதலியார் சாலை வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.