ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா கொடைக்கல் காலனிக்கு செல்லும் வழியில் சாலையோரம் அபாயகரமான கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் ஏற்கனவே 2 மான்கள் தவறி விழுந்து இறந்துள்ளன. அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். மேலும் பல வாகனங்கள் செல்கின்றன. ஆபத்து நடக்கும் முன் சாலையோரம் கிணறு பகுதியில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.குணா, கொடைக்கல்.