தவளக்குப்பத்தில் இருந்து பூரணாங்குப்பம் வழியாக புதுக்குப்பம் கடற்கரை செல்லும் மெயின் ரோடு உள்ளது. இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும்.