கரூர் மாவட்டம், பாலத்துறை பகுதியிலிருந்து தவுட்டுப்பாளையம் பகுதி வரை கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் வாத்து கறி விற்பனை செய்யும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஓட்டல்களுக்கு சாப்பிட செல்பவர்கள் தங்களது கார்களை தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி செல்கின்றன. அதேபோல் தார் சாலை ஓரத்தில் நடந்த செல்பவர்கள் மீதும் மோதி செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.