தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வெள்ளூர் கொத்தயக்காடு கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதைகள் மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?