பழனி கோர்ட்டு பகுதியில் இருந்து குறும்பபட்டிக்கு செல்ல மண்பாதை உள்ளது. இந்த பாதையை அடிவாரம், குறும்பபட்டி பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் அங்கு சேறும், சகதியுமாக மாறுவதால் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.