சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-11 15:42 GMT
கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையின் நடுவே சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. கடந்த 3-ந்தேதி இரவு இந்த தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் அந்த பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்