சாமிதோப்பில் இருந்து பொற்றையடி செல்லும் சாலையில் கரும்பாட்டூர் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த கிராசிங்கின் இரண்டு புறமும் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.