திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ரெயில்வே கேட் பாதை சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கேட் பாதை சாலையை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.