சந்தையடியில் இருந்து ஈச்சன்விளை செல்லும் சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளியும், அதன் நுழைவுவாயில் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் செல்லாமல் அதன் இருபுறங்களிலும் உள்ள இடைவெளி வழியாக செல்கின்றனர். இதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி வேகத்தடைய பள்ளியின் சுவர் வரைக்கும் நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.