நடவடிக்கை தேவை

Update: 2022-07-19 11:58 GMT

வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறைக்கு செல்லக்கூடிய சாலை குறுகியதாக உள்ளது. இதனால் மற்றொரு வாகனம் எதிரே வரும் போது மற்ற வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலையின் இரு புறமும் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது ஆடி மாத வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் வரக்கூடிய சூழ்நிலையில் சாலையின் இரு புறமும் மணலை நிரப்பவும், சாலையை விரிவுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்