மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் 70 அடி ரோடு தமிழ்நாடு குடியிருப்பு அலுவலகம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் சாலைக்கு அடியில் செல்கிறது. இந்நிலையில் இந்த குடிநீர் திறக்கும் வால்வு தொட்டியின் மூடியானது சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குடிநீர் குழாய் வால்வில் இருந்து நீரானது அதிக அளவில் வெளியேறி வருகிறது. தேங்கி நிற்கும் நீரால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த வால்வை சரியான முறையில் சீரமைக்க வேண்டும்