கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாகவும் தொடர் மழையின் காரணமாகவும் தார் சாலை நெடுகிலும் பழுது ஏற்பட்டு குண்டும் ,குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.