சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி அலங்காரபுரம் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பேவர்பிளாக் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாகமூடவில்லை. இதனால் சாலை சேதமடைந்து, தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, சாலையை சீரமைத்து, கழிவுநீரை முறையாக வழிந்தோட வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.