நாகை மாவட்டம், திட்டச்சேரியில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் மரைக்கான்சாவடி, பனங்குடி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?