இரவில் சாலையை ஆக்கிரமிக்கம் கால்நடைகள்

Update: 2022-10-16 13:47 GMT

திருவாரூர் மாவட்டம் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.டி.பி. சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் கூட்டமாக சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், கால்நடைகள் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களையும் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்