திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா 32.பருத்தியூர் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை மண்சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.