மதுரை மாவட்டம் பழைய கீழ்மதுரை ரெயில்வே ஸ்டேசன் ரோடு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையானது நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் இப்பகுதியில் சுகாதாரம் சீர்கேடும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.