திருவாரூர் மாவட்டம் எஸ்.எம்.ஏ.நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.