சாலையில் வழிந்தோடும் குடிநீர்

Update: 2022-09-17 11:03 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர், ஒன்றியம் ,கூத்தூரில் இருந்து நாகைக்கு குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகை- திருவாரூர் சாலையில் கீழ்வேளூர் அரசாட்சி குளம் பகுதியில் உள்ள குழாயில் கடந்த சில வாரங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையோரத்தில் தண்ணீர் கழிவுநீர் போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் குடிநீர் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்