குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-12 15:37 GMT

திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை கிராமம் , காமாட்சி அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்