குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-09 11:06 GMT

கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் இருந்து காமாட்சிபுரம் சோதனைச்சாவடி வரை தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பழுதான அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் இன்னலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்