பழுதாகும் வாகனங்கள்

Update: 2022-07-09 11:02 GMT

ஊட்டி பிஷப் டவுன் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தார்சாலை அமைக்கப்படாமல், சோலிங்கற்கள் மட்டுமே பதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. மேலும் முதியவர்கள், பெண்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்