சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-09 11:00 GMT

பொள்ளாச்சி ரங்கசமுத்திரத்தில் இருந்து பக்கோதிபாளையம் செல்லும் வழியில் ராயல் அவென்யூ என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த பகுதியில் மண்சாலை உள்ளது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையில் சென்று வர மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. அவசர காலங்களில் விரைவாக செல்ல முடியவில்லை. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, தார்சாலை அமைத்து கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்