தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டின் வடக்கு பக்கத்தில் வயல்களும், தெற்கு பக்கத்தில் குளங்களும் உள்ளது. இந்த சாலையில் பஸ்கள் வந்தால் எதிரே வரும் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த சாலையில் மின்கம்பங்களில் மின்விளக்குகளும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்தவும், மின்விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.