பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் அ.பிரிவு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மதுரை-வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் வெங்கடாஸ்திரிகோட்டைக்கு சாலை உள்ளது. சுமார் 2 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மண்ரோடாக மாறிய இந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.