மயிலம் அருகே தென் பசார் கிராமத்தில் இருந்து அவ்வையார் குப்பம் வரை உள்ள சுமார் 5 கிலோமீட்டர் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.