மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியகோடு பகுதியில் இருந்து காவுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.