வடபாளையத்திலிருந்து செஞ்சி வரை உள்ள சாலையின் இரு புறத்திலும் முட்செடிகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் சாலையை மறைத்தபடி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையோர மூட்செடிகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.