கண்டாச்சிபுரம் தாலுகா ஒட்டம்பட்டு கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் அனைத்தும் கண்டாச்சிபுரம் சாலையில் வழிந்தோடுகிறது. இதை பார்ப்பதற்கு கழிவுநீர் சாலைபோன்று உள்ளது. மேலும் சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கிராம மக்கள், மாணவர்கள் கடும் அவதி அடைகிறார்கள். கால்வாயை தூர்வாரி கழிவுநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.