சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-20 11:56 GMT
விழுப்புரம் அருகே வேடம்பட்டில் இருந்து ஆரியூர் செல்லும் சாலையில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல ஏதுவாக அங்குள்ள ஏரிக்கரை வழியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாதையை தார் சாலையாக அமைக்காமல் மண் சாலையாக இருப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் அந்த சாலை சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
...........

மேலும் செய்திகள்